கரூர் மாவட்டம் குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்தில், குளித்தலை
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் வெங்கடாசலம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரபாகர், மாவட்டத் துணைத் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையில், விவசாயக் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யக்கோரி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.