தோகைமலையில் விசிக சார்பில் கோரிக்கை மனு

74பார்த்தது
தோகைமலையில் விசிக சார்பில் கோரிக்கை மனு
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோகைமலை மேற்கு ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் காவிரி குடிநீர், கழிவு நீர் வடிகால் வாரிகளை முறையாக பராமரித்தல், தெருவிளக்கு, பொது சுகாதார வளாகம் அமைத்தல், மயான சாலை, பேருந்து வசதி போன்ற பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி