இராஜேந்திரம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு

6பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் கிராம மக்கள், கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் எம். கே சிவா தலைமையில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயல் அலுவலரிடம் குடிநீர் தட்டுப்பாடு குறித்து கோரிக்கை மனு அளித்தனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கோவில் திருவிழா தொடங்கும் முன் நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 22ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.