மேட்டுமருதூரில் பன்றிகள் அட்டூழியம், பொதுமக்கள் அச்சம்

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுமருதூர் ஐந்தாவது வார்டு குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பன்றிகள் வீட்டின் முன்பு வைக்கப்படும் பாத்திரங்களை இழுத்துச் சென்று சேதப்படுத்தி வருகின்றன. மேலும் தெருக்களில் திடீரென ஓடி வருவதால் சிறுவர்கள், குழந்தைகள் விளையாட அச்சப்படுகின்றனர். விவசாய நிலங்களிலும் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன. மேட்டுமருதூர் கிராம மக்கள் சார்பில், மருதூர் பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி