கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் திமுக நகர செயலாளர் மற்றும் எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் பணிகள் மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. மண்டல பொறுப்பாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, நகர துணை செயலாளர் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன், மாவட்ட விவசாய அணி தலைவர் பாலசுப்ரமணியன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் விஜயபிருந்தாவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாக்குச்சாவடி முகவர்கள் இதில் கலந்துகொண்டனர்.