கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நங்கவரம் செல்லும் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை கலைந்து செல்ல வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.