கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப
் பள்ளியில் (தகைசால் பள்ளி) மேல்நிலை செய்முறை பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இயற்பியல், வேதியியல்,
கணினி அறிவியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல்,
கணினி பயன்பாடுகள் பாடங்களுக்கான இந்த தேர்வில், 12ஆம் வகுப்பு அரசு பள்ளி
மாணவிகள் 334 பேரும், தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் 141 பேரும் ஆய்வகங்களில் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர் சுஜாதா ஷியாமளா தலைமையில் 11 அக தேர்வாளர்கள் மற்றும் 10 புற தேர்வாளர்கள் தேர்வுகளை நடத்தி வருகின்றனர்.