கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் கே. பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சீகம்பட்டி கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடம், கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக ரேஷன் கடையை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ரேஷன் கடையின் பின்புறம் உள்ள கழிவறை கதவு உடைக்கப்பட்டு மது அருந்தும் இடமாக பயன்படுத்தப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.