கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயிலில் 11 உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. தான்தோன்றிமலை உதவி ஆணையர் ராஜேஸ்வரி முன்னிலையில் உண்டியல்கள் சீல் அகற்றப்பட்டு, தக்கார் கணபதி முருகன், செயல் அலுவலர் தங்கராஜீ, ஆய்வாளர் ஹேமலதா மேற்பார்வையில் சிவனடியார்கள் 50க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்க பணம் ரூ. 8,18,536, 9.100 கிராம் தங்கத்திலான பொருட்கள், 42.200 கிராம் வெள்ளியிலான பொருட்கள் வருவாயாக கிடைத்தன.