தமிழ் தேசிய போராளி மறைந்த பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு இன்று வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வளரும் தமிழகம் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் பசுபதி பாண்டியன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வளரும் தமிழகம் கட்சி மாணவரணி மாநில செயலாளர் தமிழன் துரைராஜ், விசிக குளித்தலை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல், தமிழர் தேசம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் தீனா தேவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.