குளித்தலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
கரூர் மாவட்டம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதிமுகவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. குளித்தலை தலைமை தபால் அலுவலகம் முன்பு நகர அவைத் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், "நிதி இல்லை 100 நாள் வேலையில்லை" என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி