கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள விதைகள் அறக்கட்டளை தலைமை அலுவலகத்தில், சிறு குறு விவசாயிகள் மத்தியில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் அதன் பயன்கள் குறித்து இன்று ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. விதைகள் அறக்கட்டளை நிறுவனர் சந்துரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் புனிதாம்பிகா மற்றும் இனுங்கூர் விதை சுத்திகரிப்பு நிலைய வேளாண்மை அலுவலர் சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டு, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் விதைகளின் வகைகள், பயன்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினர். விதைகள் அறக்கட்டளை இயக்குனர் ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார்.