கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாபு என்கிற ஜோசப் செல்வராஜ் (45) மது போதையில் வீட்டிற்கு வந்தபோது, அவரது தந்தை அறிவுரை கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தந்தை லாரன்ஸ் புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.