ஆர். டி மலையில் சோமாவார நிகழ்ச்சி சிறப்பு பூஜை

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர். டி மலை ஸ்ரீ விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை மாதத்தின் இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு சங்கரபிஷேகம் பூஜைகள் இன்று நடைபெற்றன. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தின் சிவம் ஆகியோர் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி