குளித்தலை தொண்டு நிறுவன இயக்குனருக்கு தமிழக அரசின் விருது

78பார்த்தது
குளித்தலை தொண்டு நிறுவன இயக்குனருக்கு தமிழக அரசின் விருது
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 ஆம் தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் - உலக சுற்றுச்சூழல் 2025 விழா சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலும், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹீ முன்னிலையிலும் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. 

இதில் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த கிராமிய தொண்டு நிறுவனத் தலைவர் முனைவர். நாராயணன் என்பவருக்கு தன்னிகரற்ற நீர்நிலை மேலாண்மை பணிகளுக்காக சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. மேலும் ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து இன்று வாழ்த்துப் பெற்றார்.

தொடர்புடைய செய்தி