கரூர் மாவட்டம் புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக இயற்கை விவசாயத்தில் நிலையான வேளாண்மை மற்றும் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதற்கான இடுபொருட்கள் தயாரிப்பது, அதனை பயன்படுத்துவது குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியினை வேளாண் அறிவியல் மையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் திருமுருகன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செய்முறை விளக்கங்களுடன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பயிற்சி அளித்தார். இதில் இயற்கை முறை விவசாயத்தில் இயற்கை முறையில் மண்வளத்தை மேம்படுத்த பலதானிய பயிர் விதைப்பது, மண் ஆய்வுகள், பல அடுக்கு பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள், விதைக்கு ஊட்டம் அளித்து முளைப்பு திறனை மேம்படுத்துவதற்கான பீஜாமிர்தம் பயன்பாடுகள், மண்ணில் உள்ள நுண்ணூயிர்களை பெருக்குவதற்காக ஜீவாமிர்த கரைசல் பயன்பாடுகள், கனஜீவாமிர்த பயன்பாடு, பயிர் கழிவுகளை கொண்டு மூடாக்கு அமைத்தல், மண்ணின் காற்றோட்டத்திற்காக சீரான பாசன நீர் தொழில்நுட்பம், பஞ்சகவ்யா பயன்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
இப்பயிற்சியில் 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். பயிற்சியில் பங்கு பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் சான்றிதழ் மற்றும் தொழில்நுட்ப கையேடுகள் வழங்கப்பட்டது.