குளித்தலையில் குள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா

966பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் கிராமத்தில் உள்ள குள்ளமுத்து மாரியம்மன் கோவிலின் 52 ஆம் ஆண்டு பால்குட பெருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அக்னிச்சட்டி மற்றும் அலகு குத்துதல் நிகழ்வுகளும் நடைபெற்றன. தொடர்ந்து இரவு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி