குளித்தலையில் சாக்கடையை சுத்தம் செய்த காவலர்

1பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நீண்ட நாட்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் தகவல் தெரிவித்தும் பல நாட்களாக பணி செய்ய வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. சாக்கடையில் தேங்கிய கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி அலுவலகம் மற்றும் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் குடும்பத்தினருக்கு கொசு கடியால் அவதி ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தானாக முன்வந்து சுத்தம் செய்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி