குளித்தலையில் விட்டு விட்டு பெய்த சாரல் மழை

1பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுமருதூர், பணிக்கம்பட்டி, கூடலூர், குப்பு ரெட்டிபட்டி, கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் லேசான மழை பெய்தது. இன்று காலை 7 மணி அளவில் மீண்டும் சாரல் மழை விட்டு விட்டு பெய்ய தொடங்கியது. ஏற்கனவே பனிமூட்டம் இருந்த நிலையில், மழை பெய்ததால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி