குளித்தலை மாசி மக திருவிழாவின் தீர்த்தவாரி நிகழ்ச்சி

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை கடப்பவனேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருஈங்கோய்மலை மரகதம்பாள் உடனுறை மரகதாசலேசுவரர் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் குளித்தலைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு சந்திப்பு மற்றும் தீபாரதனை நடைபெற்றது. பின்னர், திருஈங்கோய்மலை சுவாமி மற்றும் குளித்தலை அருள்மிகு முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர் சுவாமிகள் கடம்பந்துறை காவிரி நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தைப்பூசம் போல் இரு கோவில்களின் அஸ்ட தேவர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி