குளித்தலையில் இரண்டு பைக்குகள் மோதி 3 பேர் படுகாயம்

617பார்த்தது
குளித்தலையில் இரண்டு பைக்குகள் மோதி 3 பேர் படுகாயம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சாலை விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். எலிமெண்டரி ஸ்கூல் பகுதியைச் சேர்ந்த கோகுல் (19) என்பவர் பைக்கில் சென்றபோது, விஜயகுமார் என்பவர் தனது நண்பர் கிஷோருடன் பைக்கில் வந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் விஜயகுமார், கிஷோர் ஆகியோர் கரூர் தனியார் மருத்துவமனையிலும், கோகுல் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோகுலின் தந்தை ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.