கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொய்யாமணி ஊராட்சியில் அதிமுகவின் இல்லந்தோறும் இரட்டை இலை பிரச்சாரம் குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள், 2026 தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து வீடு வீடாக சென்று விளக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக கிளைச் செயலாளர், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.