குளித்தலையில் மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் தப்பி ஓட்டம்

61பார்த்தது
குளித்தலையில் மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் தப்பி ஓட்டம்
கரூர் மாவட்டம் குளித்தலை நாப்பாளையம் காவிரி ஆற்றுப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து குளித்தலை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிங்காரம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது குளித்தலை சுங்ககேட் வேளாளர் தெருவை சேர்ந்த கணேசன் (49) என்பவரும் அடையாளம் தெரியாத மற்றொரு நபரும் இரண்டு இரு சக்கர வாகனங்களில் மணல் மூட்டைகளை திருடிக் கொண்டு சென்றனர்.

போலீசார் வருவதை கண்டதும் இருவரும் மணல் மூட்டை மற்றும் இருசக்கர வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓடினர். இரண்டு இரு சக்கர வாகனங்கள் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய கணேசன் மற்றும் அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி