திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலை சேர்ந்த சோமசுந்தரம் (58) என்பவர், இரும்பூதி பட்டி இபி ஆபீஸ் அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த கௌதம் ஓட்டி வந்த பைக் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். பலத்த காயமடைந்த சோமசுந்தரம் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.