விசிக கிருஷ்ணராயபுரம் கிழக்கு, தெற்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம்

0பார்த்தது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குளித்தலை சட்டமன்றத் தொகுதி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அய்யர்மலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சி உள்கட்டமைப்பு, தேர்தல் பணி, பிஎல்ஏ 2 ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (எ) மணிவேந்தன், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட து. அமைப்பாளர் வேங்கை மாணிக்கராஜ், வணிகர் அணி மாவட்ட து. அமைப்பாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளித்தலை தொகுதி மாவட்ட செயலாளர் சக்திவேல், பெரம்பலூர் மண்டல செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தொடர்புடைய செய்தி