குளித்தலையில் உலகத் தொண்டு நிறுவன தினம் கூட்டம்

6பார்த்தது
சென்னையில் செயல்படும் எண்ணங்களின் சங்கமம் அமைப்பு சார்பில் உலக தொண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை விதைகள் அறக்கட்டளை தலைமை அலுவலகத்தில் இன்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. எண்ணங்களின் சங்கமம் கூடுதல் - 2026 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் விதைகள் அறக்கட்டளை நிர்வாகி சந்துரு தலைமை வகித்தார். விதைகள் அறக்கட்டளை இயக்குநர் திருமதி ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். கரூர் மாவட்ட அளவில் சேவை செய்யும் 15க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you