திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து காமராஜ் மகன் சபரிநாதன் (25). இவர் நேற்று தனது பைக்கில் உறவினர் கரூர் திருமாநிலையூர் நடுத்தெருவை சேர்ந்த சரவணன் (52) என்பவரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை மருதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த பொலிரோ வேன் பைக் மீது மோதியதில் சபரிநாதன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த சரவணன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் திருச்சி மாவட்டம் சின்னகாட்டுகுளத்தை சேர்ந்த அருள் ராமதாஸ் என்பவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.