திருச்சி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் படுகாயம்

73பார்த்தது
திருச்சி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் படுகாயம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா உசிலம்பட்டியை சேர்ந்தவர் சண்முகப்பிரியன் 30. இவர் கடந்த 18ஆம் தேதி பாதிரிப்பட்டி சாலையில் பொன்னம்பட்டி குளம் அருகே சென்றுள்ளார். அப்போது எதிரே அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி நிற்காமல் சென்று விட்டது. 

இதில் படுகாயம் அடைந்த சண்முகப்பிரியன் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் இதுகுறித்து சண்முகப்பிரியன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Job Suitcase

Jobs near you