அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆஸ்டின் வளாகத்தின் நர்சிங் பள்ளியின் 5-வது டீனாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவிதா ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் வளர்ந்த அவர், மும்பை பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பட்டமும், அமெரிக்காவில் மின் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பின்னர் நர்சிங் துறையில் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். வயதானவர்களின் உடல்நலத்தை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.