ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பைத் தொட்டு முத்தமிடுவதும் போக்சோ சட்டப்பிரிவு 3 மற்றும் 4-ன் கீழ் கடுமையான ஊடுருவல் பாலியல் வன்கொடுமை (Penetrative Sexual Assault) குற்றமே என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 14 வயது சிறுவனுக்கு எதிரான குற்றத்திற்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில், "இத்தகைய செயல்கள் வெறும் பாலியல் தொல்லை கிடையாது; அது பாலியல் வன்கொடுமைக் குற்றமே" என நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.