கேரளா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. உப்புதரா-9, சின்னக்கானல்-3, தேவிகுளம், மறையூரில் தலா 1, தேவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 1 என 15 இடங்களில் திமுக போட்டியிட்டது. இடுக்கி-19, பாலக்காடு-4, திருவனந்தபுரத்தில் 2 என 25 இடங்களில் அதிமுக போட்டியிட்டது. போட்டியிட்ட அணைத்து தொகுதியிலும் இரு கட்சிகளும் தோல்வியுற்றது.