கிலாவியாவில் எரிமலை சீற்றம்.. 1,100 அடி பாய்ந்த லாவா நீரூற்றுகள்

15பார்த்தது
அமெரிக்காவில் இருக்கும் ஹவாய் தீவில் அமைந்திருக்கும் பிரபலமான எரிமலைகளில் ஒன்றான கிலாவியா எரிமலை, கடந்த நவ.9-ஆம் தேதி சுமார் 5 மணி நேரம் தீப்பிழம்பை நீரூற்றாக வெளியேற்றியுள்ளது. இந்த சீற்றத்தின்போது, லாவா நீரூற்றுகள் 1,100 அடி உயரம் வரை சென்றன. இதில் உச்சக்கட்டமாக, எரிமலை சிகரத்திற்கு அருகில் சாம்பல் சூறாவளி (Volnado) எனப்படும் டோர்னடோ போன்ற சுழற்சி உருவானது. தற்போது சீற்றம் நின்றாலும், கிலாவியா எரிமலை தீப்பிழம்புகளுடன் காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி