சென்னை ரோகினி திரையங்கில் ’
கில்லி’ மற்றும் ’
துணிவு’ படம் பார்க்க வந்த ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்
கில்லி படம் வெளியாகியுள்ள திரைக்கு சென்ற ’கடவுளே அஜித்தே’ என்று கூச்சலிட்டுள்ளனர். இதனால்
விஜய் ரசிகர்களும் பதிலுக்கு ’
தளபதி’ என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து இரு தரப்பு ரசிகர்களும் மாறி மாறி கோஷம் எழுப்பி வந்தனர்.சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி வைத்தனர்.