‘கிணறு’ திரைப்படம்: சர்வதேச விழாவில் பாராட்டும் விருதும் வென்றது

1பார்த்தது
‘கிணறு’ திரைப்படம்: சர்வதேச விழாவில் பாராட்டும் விருதும் வென்றது
இயக்குநர் ஹரி குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிணறு’ திரைப்படம், கிராமத்து சிறார்களின் கிணற்றில் நீராடும் உளவியல் ஆசையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஸ்டோரீஸ் மற்றும் பெட்ரா ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டையும் விருதையும் வென்றது. படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்ட நடிகர் ஜீவா, "படக்குழு பயங்கரமான உழைப்பை போட்டுருக்காங்க. நல்ல பீல் குட் படம். ஒரு இரானியன் படம் பார்த்த உணர்வு இருந்துச்சு. நிறைய இடத்துல எனக்கே தெரியாம அழுதுட்டேன். இந்த படம் எல்லாருக்குமே பிடிக்கும். குறிப்பா படத்துல ஒரு பாட்டி வராங்க, அவங்க சூப்பரா நடிச்சிருக்காங்க. இந்தப்பட டைரக்டர் தமிழ்நாட்டுல ஒரு குக் கிராமத்து வாழ்வியல ரொம்ப அழகா காமிச்சிருக்காரு. எல்லாரும் பார்க்க வேண்டிய படம், ரொம்ப நாள் கழிச்சு நல்லா சிரிச்சு என்ஜாய் பன்னேன். இயற்கை ரசிக்கிற மாதிரி இந்த சினிமா இருந்துச்சு" எனப் படக்குழுவினரைப் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி