பிரிட்டன் மன்னர் சார்லஸ், தனது சகோதரர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்களை பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார். மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் காரணமாகவே ஆண்ட்ரூவிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரை விண்ட்சர் அரண்மனையில் இருந்தும் வெளியேற்றியுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஆண்ட்ரூ தனது டியூக் ஆஃப் யார்க் பட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்டதையடுத்து இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.