உலகிலேயே முதலாக 2026-ஐ வரவேற்றது கிரிபாட்டி.. மக்கள் கொண்டாட்டம்

7083பார்த்தது
2026-ம் புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள கிரிபாட்டி நாட்டின் கிரிஸ்துமஸ் தீவு மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். சுமார் 7,500 மக்கள் வசிக்கும் இந்த பகுதியில், இந்திய நேரப்படி இன்று (டிச.31) பிற்பகல் 3:30 மணிக்கே புத்தாண்டு பிறந்துவிட்டது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், இந்தியா இன்னும் சரியாக 8:30 மணி நேரத்தில் புதிய ஆண்டிற்குள் நுழைய உள்ளது.

நன்றி:NewsTamil24/7