ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்தது. ஃபின் ஆலன் (93), ரகுவன்ஷி (82*), மற்றும் கேமரூன் கிரீன் (52*) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் கேகேஆர் இந்த இமாலய ஸ்கோரை எட்டியது. 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் காணும் குஜராத் (GT) அணி, இப்போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது எளிதாகும்.