64 ஆண்டுகளாகத் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கும் கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 'நாயகன்', 'சிவாஜி', 'பொன்னியின் செல்வன்' போன்ற படங்களுக்கு பணியாற்றிய இவருக்கு, வரும் 13-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பிரான்ஸ் தூதர் இந்த விருதை வழங்க இருக்கிறார்.