கொல்கத்தாவில் நேற்று (மே 16) நடந்த
ஐபிஎல் தொடரின் 60வது டி20 போட்டியில், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, ஃபின் ஆலன் (93 ரன்), அங்கிரீஷ் ரகுவன்ஷி (82 ரன்), கேமரூன் கிரீன் (52 ரன்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.