அதிமுகவில் இணைந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர்

31பார்த்தது
அதிமுகவில் இணைந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் இன்று (அக்.12) அதிமுகவில் இணைந்தனர். பள்ளிபாளையம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகினர். அதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் ஒருங்கிணைந்த ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜசேகர் தலைமையில்,  அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் இணைந்தனர். தொடர்ந்து, அதிமுகவில் பலரும் தங்களை இணைத்துக்கொண்டு வருவது, கட்சியை பலப்படுத்துவதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி