கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை டிச., 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ் மற்றும் ஜித்தன் ஜாய் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் ஆகியோரும் ஆஜராகினர். வழக்கின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த உதகை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிச., மாதத்துக்கு ஒத்திவைத்தார்.