ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழகம் வந்தடைந்தது. 2 நாட்களுக்கு முன்பே தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக வந்தடைந்தது. தமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் இன்று (மே.28) இரவு பூண்டி ஏரியை சென்றடையும் என அதிகாரிகளில் கூறுகின்றனர். மக்களின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.