
கடலூரில் 2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டில் 2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் அகஸ்டின் (24) கைது செய்யப்பட்டார். பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, ஆசிரியரை தாக்கிய சிறுமியின் உறவினர்கள், அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






























