கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில், போச்சம்பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்ற கொப்பரை ஏலத்தில், போச்சம்பள்ளி பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் சுமார் 11.5 டன் கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வெள்ளக்கோவில், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்ற இந்த ஏலத்தில், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ₹157 வரை ஏலம் போனது.