கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காட்டாகரம் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து தொகரப்பள்ளி காப்பு காட்டில் விட்டனர். இதேபோல், பாரூர் அருகே கீழ்குப்பம் கிராமத்திலும் ஒரு மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.