கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர்
எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் மதுரைவீரன் மற்றும் பரமேஸ்வரி தம்பதியினரின் 2 வயது மகன் வசந்த், நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் திறந்திருந்த கழிவறை குழியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.