போச்சம்பள்ளி அருகே கீழ் மைலம்பட்டியைச் சேர்ந்த சரவணன் (48) என்பவர், மதுபோதையில் பொது இடங்களில் அடிக்கடி கலாட்டா செய்து வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு, போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பில் சாலை நடுவே இருசக்கர வாகனத்தை நிறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் வைரலானது. இதனையடுத்து, போலீசார் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது, அவர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் போச்சம்பள்ளி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.