கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கொடமாண்டப்பட்டி கீழ்சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த காட்டுராஜா என்பவர், 10 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் (செப்.,29) காலை மேயச்சலுக்கு கொண்டு சென்று விட்டு, மாலை கொட்டகையில், விட்டுவிட்டு சென்றார்.
இந்த நிலையில், நேற்று காலை செப் -29ம் தேதி பால் கறக்க வந்த போது அங்கு பசு ஒன்று மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில், விரைந்து வந்த வனத்துறையினர் கால் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். மர்ம விலங்கால் கிராம மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.