கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அடுத்துள்ள கொட்டிலேத்தி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (39) கட்டிட மேஸ்திரியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. தனது வீட்டின் மதுபாட்டிலை வைத்திருந்தார். நேற்று முன்தினம் செம்-23ம் தேதி அன்று மதுபாட்டிலை எடுத்து குடிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு தெரியமல் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து, மது என நினைத்து குடித்துள்ளார். இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.