கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே மலையாண்டஅள்ளி அரசு மதுபான கடையில் இருந்து மது பாட்டில்களை கள்ளத்தனமாக வாங்கி வேலம்பட்டி பகுதியில் விற்பனை செய்ததாக வந்த தகவலின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, டூவீலரில் வந்த செலசனம்பட்டியைச் சேர்ந்த நாகமணி (60) என்பவரிடம் சோதனை செய்ததில், அவரிடம் மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.